ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது: சீனாவில் பிபிசிக்கு தடைவிதித்ததற்கு அமெரிக்கா கண்டனம்!

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதற்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்கா பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் நீட் பிரைஸ் கூறுகையில், ‘பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதன்மூலம் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.
கொரோனா வைரஸ் மற்றும் வீகர் இனவாத சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசியின் ஊடக ஒளிபரப்பு குறித்து ஆத்திரமடைந்திருந்த சீனா, இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின்ன் இந்த முடிவு ஏமாற்றம் தருவதாக பிபிசி நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் அதன் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஒஃப்காம், சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) என்ற சீன அரசாங்கம் ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக, பிபிசி மீதான சீனாவின் உள்நாட்டு ஒளிபரப்பு தடை அமைந்திருக்கிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.