ஊடக சுதந்திர தினம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி!
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பிரதான ஈகைச் சுடரினை மூத்த ஊடகவியலாளர் எம்.எம்.லாபிர் ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக நாடுகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த ஆண்டு கொண்டாடப்படும் ஊடக சுதந்திர தினமானது தேர்தல்கள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் ஊடகங்களில் பங்களிப்பு எனும் பிரதான தொனிப்பொருளில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.