எங்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர்- வர்த்தமானி வெளியானது

எங்கள் மக்கள் சக்தியின் (அபேஜன பல பக்ஷ) நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலிய ரத்ன தேரர் பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இந்த பெயர் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) விசேட வர்த்தமானியின் மூலம் ரத்தன தேரரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சீஹேவா தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்திருந்த நிலையில், அந்த ஆசனத்துக்கான உறுப்பிரைத் தெரிவுசெய்வதில் தொடர்ந்து இழுபறிநிலை தொடர்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.