எஞ்சிய ஆசிய கிண்ண போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்!
In கிாிக்கட் September 20, 2018 12:45 pm GMT 0 Comments 1532 by : ஜெயச்சந்திரன் விதுஷன்
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா நலமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆசிய கிண்ண தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிராக 18 ஆவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வீசியபோது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மைதானத்தில் விழுந்தார்.
இதனை அடுத்து நோயாளர் காவு வண்டியின் மூலம் அவர் மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா நலமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபை இன்று அறிவித்துள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவரால் எழுந்து நிற்க முடிவதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
போட்டிகள் நடைபெறும் ஐக்கிய அரபு இராஜியத்தில் நிலவும் கடும் உஷ்ணம் காரணமாக பாண்டியாவின் உடல் நிலையை பாதித்துள்ளதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றைய போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.