எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பா.ஜ.க அதிரடி உத்தரவு
In இந்தியா February 16, 2021 3:02 am GMT 0 Comments 1109 by : Yuganthini

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பா.ஜ.க எச்சரித்துள்ளது.
கர்நாடகத்தில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் முதலமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலர் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் பா.ஜனதா துணை தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக பேசி வருகின்றனர். இதனை காரணம் காட்டி பா.ஜனதா அரசுக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்தே கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பா.ஜனதா தலைமை எச்சரித்துள்ளது.
மேலும் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில பா.ஜனதா தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.