எட்மண்டனில் கடந்த 10 வருடங்களில் 3 ஆவது முறையாக உயர் வெப்பநிலை பதிவு!
In கனடா January 3, 2019 9:20 am GMT 0 Comments 1272 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

எட்மண்டனில் கடந்த மாதங்களாக குளிர்காலநிலை நிலவிவந்த நிலையில் இந்த ஆண்டு அதிக வெப்பநிலை கொண்ட நாளாக ஜனவரி 2 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டில் எட்மண்டனில் பூஜ்யத்திற்கு மேல் வானிலை மூன்று முறை மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதுவும் 2007 ஆம் ஆண்டு அதிகமாக 7.7 டிகிரி ஆக பதிவாகியிருந்தது.
இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு உச்ச வெப்பநிலை 7.9 டிகிரியை எட்டியது என வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை காரணமாக கடந்த நாட்களாக குளிரில் வாடிய மக்கள், தற்போது வெளியில் சென்று மாலை பொழுதினை பூங்கா மற்றும் பிறபகுதிகளில் களித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எட்மன்டனின் 1950 இல் இதே நாளில், குளிரான காலநிலை -41 டிகிரி பதிவானது. சராசரியாக உயர் மற்றும் குறைந்த அளவில் முறையே -6 மற்றும் -14 டிகிரியில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.