எட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை!

எட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படவுள்ளது.
குறித்த இடைக்காலத் தடை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு வாரம் கடுமையான குளிரைத் தொடர்ந்து, தடை விதிக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேச இன்று (செவ்வாய்க்கிழமை) நகர சபை அதிகாரிகள் கூடவுள்ளனர்.
இந்த நிலையில் கடுமையான பனியைத் தொடர்ந்து வாகன தரிப்பிடங்கள் மட்டுமல்லாமல் வீதிகளிலும் பனி நிரம்பியுள்ளது.
இதனால் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள அடையாளங்கள், வீதிகளில் ஆங்காங்கே வைக்கப்படவுள்ளன.
இறுதியாக கடந்த 8ஆம் திகதி வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.