எதிர்ப்புகளுக்கு மத்தியில் வவுனியாவில் மேலும் 80 அகதிகள்?
In ஆசிரியர் தெரிவு May 30, 2019 4:29 am GMT 0 Comments 1720 by : Dhackshala
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள மேலும் 80 அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த அகதிகளை இன்று (வியாழக்கிழமை) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
அவர்கள் சில தினங்களில் தங்களது சொந்த நாடுகளுக்கு அல்லது வேறொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே மீண்டும் 80 அகதிகளை அங்கு தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இந்த விடயம் குறித்து செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.