எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறு!

நாட்டில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென் மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழமான தாழமுக்கம் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.
அதன்படி, நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அது, மணிக்கு 90 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும்.
இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.