எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வருகின்றார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார். அரசு விழாவில் பங்கேற்றார்.
அந்த விழாவில் சட்டசபை தேர்தலில் பா.ஜ. உடனான கூட்டணி தொடரும் என முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசித்தார். முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். அவர் வந்து சென்ற பின் ரஜினி கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு விழாவில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருந்து விமானத்தில் கோவை செல்கிறார். அங்கு விழாவில் பங்கேற்கிறார். அப்போது பிரதமரை முதல்வரும். துணை முதல்வரும் சந்தித்துப் பேசுகின்றனர். நடிகர் ரஜினியும் சந்தித்து பேசலாம் என தெரிகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.