எத்தனை பேரை வேண்டுமானாலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார் – இராணுவத் தளபதி
In இலங்கை October 13, 2020 7:38 am GMT 0 Comments 1525 by : Dhackshala
நாட்டு மக்களின் நன்மைக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் இராணுவம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போதைய சூழலில் இரண்டாயிரம் பேரைத் தனிமைப்படுத்தக்கூடிய மையம் அமைக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் தற்போதைய நிலையில் 96 வயதிற்குட்பட்ட 10,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டு மக்களின் நன்மைக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் இராணுவம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார்.
மினுவங்கொட கொரோனா தொத்தணியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட பெண் நோய்வாய்ப்படுவதற்கு முன்னர் அவருக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன.
அவரை பின் தொடர்ந்தபோது சுமார் 33 பேர் கொண்ட குழு அதே நோய் அறிகுறிகளை கொண்டுள்ளமை உறுதியானது. இவ்வாறு தேடி வருகின்றோம். இப்படி இருக்கையில் இதுதான் ஆரம்பப்புள்ளி என எந்தவித நம்பிக்கையுமின்றி சொல்வதில் நியாயமில்லை.
புலனாய்வுப் பிரிவு உட்பட அனைத்து இராணுவமும் சுகாதார பாதுகாப்பிற்காக செயற்பட்டு வந்தாலும் அதனால் எந்த வகையிலும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படவில்லை.
அனைத்து அதிகாரிகளும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.