எத்தியோப்பியாவில் யுத்த பகுதிகளில் சிக்கிய இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை!
In இலங்கை November 27, 2020 4:12 am GMT 0 Comments 1722 by : Yuganthini
எத்தியோப்பியாவில் யுத்த பகுதிகளில் சிக்கியிருந்த 38இலங்கையர்கள் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 38 இலங்கையர்களும் ஐக்கிய நாடுகளின் உதவிகளுடன் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியத்தில் மூன்று வாரங்களாக இடம்பெற்ற மோதலில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் மத்திய அரசின் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் டைக்ரேயன் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது
இதனை அடுத்து எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது பிராந்திய அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து நவம்பர் 4 முதல் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.