எத்தியோப்பிய போர்: சூடானுக்கு படையெடுக்கும் அகதிகள்- உதவி கோருகிறது ஐ.நா.

எத்தியோப்பிய அரசாங்கத்துக்குள் அந்நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான டைக்ரே பிராந்திய அயுதக் குழுவுக்கும் இடையில் உக்கிர போர் நடைபெறுகிறது.
இந்நிலையில், அருகிலுள்ள சூடானுக்கு அகதிகளின் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து வருவதால் அவர்களுக்கு உதவ, 150 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகாமைத் தலைவர் (UNHCR) பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.
எல்லை கடந்து சூடானுக்கு தப்பிவந்துள்ள அகதிகள் தங்கியுள்ள உம் ரக்பா என்ற முகாமுக்கு இன்று சென்றிருந்த அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் நான்காம் திகதி எத்தியோப்பியாவின் கூட்டாட்சிப் படைகளுக்கும் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் படைகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது.
இதனால், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எத்தியோப்பிய அகதிகள் சூடானில் தஞ்சம் புகுந்துள்ளனர். எனினும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூடானால் அகதிகளுக்கு உதவுவதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு தஞ்சமைடைந்துள்ள அகதிகளுக்கு நீர், தங்குமிடம், உணவு மற்றும் சுகாதார சேவைகளை வழங்க சூடானுக்கு ஆறு மாதங்களுக்கு 150 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக பிலிப்போ கிராண்டி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சூடானுக்கு நிதி உள்ளிட்ட வளங்களை உடனடியாக வழங்குமாறு நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, எத்தியோப்பிய போரில் இருந்து தப்பி, ஒவ்வொரு நாளும் 500 முதல் 600 அகதிகள் வரை எல்லையைத் தாண்டி வருகின்றனர்.
அத்துடன், அரசாங்க புள்ளி விபரங்களின்படி, சூடானில் கிட்டத்தட்ட 42 மில்லியன் மக்களில் 65 வீதமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கவலை வெளியிட்டுள்ள கிராண்டி, ஐக்கிய நாடுகள் சபையின் வருகைக்கு எத்தியோப்பிய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.