எந்தவிதமான போருக்கும் தயார் : இராணுவ தளபதி மனோஜ் அறிவிப்பு!
In இந்தியா January 11, 2020 9:06 am GMT 0 Comments 1680 by : Krushnamoorthy Dushanthini
நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையும் பலமாக உள்ளதாகவும், எந்தவிதமான போருக்கும் இராணுவம் தயாராக உள்ளதாகவும் இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாங்கள் எதிர்கால போர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சி அளித்து வருகிறோம். எந்த நேரத்தில், எந்த விதத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எண்ணிக்கை முக்கியமல்ல தரமே எங்களின் தாரக மந்திரம்.
பாதுகாப்பு பணியாளர்களுக்கான தலைவர் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைப்பது பெரிய நடவடிக்கை. இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.
இராணுவத்தை பொறுத்தவரை இந்திய அரசியலமைப்பிற்கு நாங்கள் எப்போதும் விசுவாசமாக இருக்கிறோம். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை எங்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது.
இராணுவ நடைமுறைகளின்படி சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தக்க பதிலடி கொடுக்கப்படும். இதற்கு முன்பு இருந்ததை விட இந்திய இராணுவம் இப்போது பலமாகவும் சிறப்பாகவும் உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.