எனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ள உதயநிதி!
In சினிமா March 9, 2018 4:23 am GMT 0 Comments 1395 by : Yuganthini

நடிகர் உதயநிதி, அட்லியின் இணை இயக்குநராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் இந்துஜா ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும், ஏப்பரலில் படப்பிடிப்பை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.