எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவின் பாதுகாப்பு பணிக்காக பொலிஸார் குவிப்பு
In இந்தியா September 30, 2018 5:41 am GMT 0 Comments 1611 by : Yuganthini

சென்னையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவின் பாதுகாப்பு பணிக்காக 17 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு இந்த பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தியுள்ளனர்.
குறித்த விழாவில் அரசு துறைகளின் சாதனை விளக்கக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பித்து வைத்து, நூற்றாண்டு நிறைவு விழா மலரையும் வெளியிடவுள்ளார்.
மேலும் விழாவில் 5136 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதுடன் எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றியவர்கள் சிறப்பிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.