எல்லைகளை கடந்து கொரோனாவை முறியடிக்க ஒன்று கூடவேண்டும் – மோடி அழைப்பு!
In இந்தியா February 19, 2021 5:41 am GMT 0 Comments 1159 by : Krushnamoorthy Dushanthini

நாட்டின் எல்லைகளை கடந்து கொரோனாவை முறியடிக்க ஒன்று கூடவேண்டும் என பிரதமர் நரேந்தி மோடி அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளன.
பத்து ஆசிய நாடுளின் சுகாதார அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதன்போதே மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ கொரோனா பாதிப்பை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தியதால், உலகிலேயே மிகவும் குறைந்த இறப்பு எண்ணிககை கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உலகம் எங்கும் பயணிக்க அனுமதிக்கும் சிறப்பு விசாவை ஏற்படுத்தலாம் என்றும் மோடி யோசனை தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் ஆலோசித்து தடையற்ற விமான ஆம்புலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்குமாறும் மோடி கேட்டுக் கொண்டார்.
கொரோனாவைத் தடுக்கவும் இதுபோன்ற தொற்று நோய்களை ஆய்வு செய்யவும் அனைவரும் கூட்டாக இணைந்து செயல்படும் ஒரு மையத்தை ஏற்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.