எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜேர்மனி!!
In ஐரோப்பா February 15, 2021 7:39 am GMT 0 Comments 1374 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி கடுமையாக்கியுள்ளது.
அந்தவகையில் சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன் செக் குடியரசின் எல்லையும் ஜேர்மனி மூடியுள்ளது.
அதன்படி குறித்த பகுதி ஊடாக, ஜேர்மன் மக்கள், டிரக் ஓட்டுநர்கள், போக்குவரத்து மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் இன்னும் சிலருக்கு நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஜேர்மனிக்கு வெளியே வசிக்கும் எல்லை தாண்டிய தொழிலாளர்களை கோபப்படுத்தியுள்ளது.
சமீபத்திய வாரங்களில் ஜேர்மனியில் தொற்று வீதம் படிப்படியாகக் குறைந்துவிட்டபோதும் பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாடுகளின் தாக்கம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே நாட்டின் முடக்க கட்டுப்பாடுகளை மார்ச் 7 வரை நீடிக்க அதிபர் அங்கலா மேர்க்கெல் மற்றும் ஜேர்மனியின் 16 மாநில ஆளுநர்களுடன் சந்திப்பின்போது முடிவு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.