ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைப்பு
In இலங்கை February 23, 2021 7:20 am GMT 0 Comments 1187 by : Jeyachandran Vithushan

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஜனாதிபதி செயலகத்தினால் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வாவின் தலைமையில் ஐவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
2019 செம்டெம்பர் மாதம் 31 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவின் சாட்சிய விசாரணை ஆரம்பிக்கப்பட்ட அன்று முதல் 214 தடவைகள் கூடிய ஆணைக்குழு, 457 சாட்சியாளர்களிடம் 640 சந்தர்ப்பங்களில் விசாரணைகளை முன்னெடுத்தது.
அத்துடன், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியங்களாக 2,230 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.