ஏப்ரல்-21 தாக்குதல்: 90 வீத பொலிஸ் விசாரணை நிறைவு!

ஏப்ரல்-21 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான 90 வீத பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கோட்டை – மாதிவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 37 பேருக்கு எதிராக மனிதக் கொலை சூழ்ச்சி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் ஏனையவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த நடவடிக்கைகளை சட்டமா அதிபர் விரைவுப்படுத்தும் பட்சத்தில் குற்றவாளிகளை எம்மால் அடையாளங் கண்டுகொள்ள முடியும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.