News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  1. முகப்பு
  2. WEEKLY SPECIAL
  3. ஏற்கனவே கணிக்கப்பட்டு விட்ட உலக அழிவு… – 4000 பக்கங்களில் பதிவு

ஏற்கனவே கணிக்கப்பட்டு விட்ட உலக அழிவு… – 4000 பக்கங்களில் பதிவு

In WEEKLY SPECIAL     March 24, 2018 10:34 am GMT     0 Comments     2938     by : Puvanes

தொழில் நுட்ப வளர்ச்சியினால் உலகம் சுருங்கிய நாள் முதல் உலக அழிவு தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த முதலாம் 2ஆம் உலக யுத்த காலத்திலும் கூட உலக அழிவு தொடர்பில் பெரிதாக பிரஸ்தாபிக்கப்படவில்லை காரணம் அப்போதைய காலகட்டத்தில் இப்போது உள்ள செய்தித் தொடர்பாடல்கள் இல்லை.

ஆனால் இப்போதோ சிறியதோர் விபத்து முதல், பாரிய அனர்த்தம் வரை அனைத்தையும் உலக அழிவோடு தொடர்பு படுத்தி பேசுவது நாகரீகமாகப் போய்விட்டது.

இவ்வாறு பூமிக்கிரகத்தின் அழிவு தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், புகழ்பெற்ற விஞ்ஞானியும், அறிவியல் மேதையுமான ஐசாக் நியூட்டன் உலக அழிவு தொடர்பில் கணித்து கூறியுள்ளார்.

உலக அழிவு தொடர்பில், ஒருபக்கம் சதியாலோசனைக் கோட்பாடுகள், மறுபக்கம் விஞ்ஞானிகளின் தகவல்கள் அத்தோடு மதக்கோட்பாட்டாளர்கள் முன்வைக்கும் கருத்துகள் என அண்மைய நாட்களில் பலவிதமான செய்திகள் வெளிவந்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.

அழிவு ஆரம்பமாகின்றது என அமெரிக்க ஆய்வாளரான டேவ் மீடி அண்மையில் தெரிவித்த தகவல்களால் மேற்குலகம் புரியாததோர் அச்சத்தில் உள்ளது.

உலக அழிவு தொடர்பில் ஐசாக் நியூட்டன் 1704 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே கணிப்புகள் மூலம் குறித்து வைத்துள்ளமை ஆச்சரியமே.

விவிலியத்தின் வசனங்கள் மற்றும், தீர்க்கதரிசி தானியேலின் கூற்றுகளை ஆராய்த பின்னரே நியூட்டன் சுமார் 4000 இற்கும் அதிக பக்கங்களில் உலக அழிவினை பதிவு செய்து வைத்துள்ளார்.

அதன்படி 2060 ஆம் ஆண்டு முதல் உலக அழிவு ஆரம்பமாகும் என நியூட்டனின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆச்சரியமான விடயம் யாதெனின் நியூட்டனின் குறித்த குறிப்பு பதிவுகளில் இதுவரை உலகில் நடந்த விடயங்களும் கூட மிகச்சரியாக கணித்து கூறப்பட்டுள்ளதே ஆகும்.

மேலும், கொள்கைகள் அற்ற நாடுகள் காரணமாக இந்த உலகின் அழிவு ஆரம்பமாகும் எனவும், உலக அழிவு தொடர்பில் பலரும் எதிர்வு கூறினாலும் அவையனைத்தும் பொய்த்துபோகும் அதன் பின்னர் அழிவு ஆரம்பமாகும் என நியூட்டனின் குறிப்புகளில் உள்ளது.

இந்த நிலையில், நியூட்டனின் குறிப்புகளை ஆய்வு செய்த ஆய்வாளர் ஒருவர், தற்போது தொடர்ந்தும் உலகில் நடைபெற்று வரும் சம்பவங்கள் நியூட்டனின் கணிப்பை மெய்ப்பிப்பதாகவே உள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை, எத்தனை முறைகள் உலக அழிவுகள் தொடர்பில் கதைகள் வெளிவந்தாலும் மக்கள் மத்தியில், “நாம் வாழும் பூமி என்றுமே அழியாது” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் தொடர்ந்து வருகின்றது.

ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் உலக நடப்புகளை அவதானித்து , தீர்க்க தரிசனங்களை ஆய்வு செய்யாமலேயே உலகம் அழிவை நோக்கியே பயணிக்கின்றது என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளமுடியும்.

எனினும் தீர்க்கதரிசிகளின் கணிப்புகளின் படி திடீரென ஒட்டுமொத்த பூமியும் அழிவடையுமா என்பதே இப்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • விரைவாக மாசடையும் வளிமண்டலம்  

    பூமியில் வளி மண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் செறிவு மிகவும் விரைவாக அதிகரித்து வருவதாக சுட்டிக்கா

  • வைரஸ்களினால் உலகம் அழியும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!  

    சில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்த தவறினால் எதிர்வரும் 2050ஆம் ஆண்டு உலகில் பல மில்லியன் மக்கள் உயிரி

  • பூமிக்கு மேலும் 2 நிலவுகள் – உறுதி செய்தனர் விஞ்ஞானிகள்  

    அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதும், அவற்றுக்கு துணை கோள்கள் இருப்பதும் நாம் அனைவ

  • நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்!  

    நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஒன்று, 612,500 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  • மூன்று அமாவாசை விரதங்களின் பயன்கள்  

    ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். மனித இயக்க ஆற்றல் சக்தியாக தெய


#Tags

  • World end
  • world war
  • உலக அழிவு
  • நியூட்டன்
  • பூமி
    பிந்திய செய்திகள்
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
    பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
  • தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
    தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.