ஏலத்திற்கு வரும் ஈஃபிள் கோபுரத்தின் பழைய படிக்கட்டு!
In WEEKLY SPECIAL November 11, 2018 2:41 am GMT 0 Comments 1300 by : Benitlas

ஈஃபிள் கோபுரத்தில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட இரும்பிலான பழைய படிக்கட்டு இம்மாதம் ஏலத்தில் விடப்படவுள்ளது.
1889ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த படிக்கட்டுகள் தற்போது சோம்ப்ஸ்-எலிசே அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
1889 ஆம் ஆண்டு ஈஃபிள் கோபுரம் அமைக்கப்பட்டபோது உருவாக்கப்பட்ட இந்த படிக்கட்டுக்கள் பின்னர் 1983 ஆம் ஆண்டு கோபுரத்திலிருந்து அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக மின் தூக்கிகள் பொருத்தப்பட்டன.
இரண்டாவது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்துக்கு ஏறுவதற்குரிய படிக்கட்டாக இது இருந்தது. இது நான்கு மீட்டர்களுக்கு மேற்பட்ட உயரத்தினையும், 25 படிக்கட்டுக்களையும் கொண்டுள்ளது.
இந்தநிலையில் இது எதிர்வரும் 27 ஆம் திகதி ஏலத்துக்கு விடப்படவுள்ளதாகவும், அதன் ஆரம்ப விலை €60,000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏலத்தில் சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரேஸில் ஆகிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.