ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
In இந்தியா December 8, 2020 2:51 am GMT 0 Comments 1407 by : Krushnamoorthy Dushanthini

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி தற்போது குறித்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 470 ஐக் கடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் திடீரென மயங்கி விழுந்ததுடன், ஏராளமானோருக்கு மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன.
இதன்காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் ஒருவர் இந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மர்ம நோய் தொடர்பில் அறிய பாதிக்கப்பட்வர்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு எய்ம்ஸ் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் சிறப்புக் குழுவுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பின் குழுவும் ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.