ஏ.ஆர்.ரஹ்மானிடம் சிவகார்த்திகேயன் வைத்த முக்கிய கோரிக்கை!
In சினிமா September 18, 2018 11:15 am GMT 0 Comments 1430 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பொன்ராமின் ‘சீமராஜா’ படத்துக்கு பின்னர் சிவகார்த்திகேயனிடம் ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் ‘SMS’ எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படங்கள் உள்ளது.
இதில் ரவிகுமார் இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கின்றார்.
இந்த படத்திற்கான ஆரம்ப பாடலை சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுக் காண்பித்துள்ளார்.
அதை கேட்டு ரசித்த சிவகார்த்திகேயன், இப்பாடலை நீங்களே பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறினாராம்.
அதற்கு ரஹ்மானும் ஆம் என கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜோனரில் உருவாகும் இந்த படத்தை ’24AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
மேலும், முக்கிய வேடங்களில் கருணாகரன், யோகி பாபு, பானுப்ரியா, இஷா கோபிகர், ஷரத் கெல்கர் ஆகியோர் நடிக்கின்றனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.