ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருகை தருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு
In இலங்கை January 18, 2020 5:46 am GMT 0 Comments 1581 by : Yuganthini

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித்தலைவர் ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹ்யன் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு அவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்ற தனது எதிர்ப்பார்ப்பினை உறுதிப்படுத்துவதோடு ஐக்கிய ராச்சியத்திற்கு வருகைதருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தநிலையில் அபுதாபி அரசாங்கத்தின் முடிக்குரிய இளவரசரின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும் பொதுவான அபிலாஷைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்பதால் இருதரப்பினரும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.