ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை!
In இலங்கை January 12, 2021 4:30 am GMT 0 Comments 1298 by : Yuganthini

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம், நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டத்தின்போது, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பிலும் இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கூட்டத்தில் கட்சியின் சகல உறுப்பினர்களையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.