ஐந்தாவது நாளில் பிபிசி தலைமையகத்தை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன்
In இங்கிலாந்து October 11, 2019 10:18 am GMT 0 Comments 1550 by : shiyani

காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஐந்தாவது நாளான இன்று பிபிசி நிறுவனத்தின் தலைமையகத்தை இலக்கு வைத்து எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிபிசி நிறுவனத்தின் தலைமையக கட்டிடத்தின் நுழைவாயிலைத் தடுத்து முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஊழியர்கள் உள்ளே செல்லவோ வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிபிசி காலநிலை அவசரநிலையை அறிவிக்க மறுத்துவிட்டதாலும் தங்களது நிகழ்ச்சிகளின் மூலம் உயர் கார்பன் வாழ்க்கை முறைகளை பிபிசி தொடர்ந்து இயல்பாக்குவதாலும் பிபிசி தலைமையகத்தை இலக்கு வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் தெரிவித்வத்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக லண்டனில் எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.