ஐந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்!
In இங்கிலாந்து January 8, 2018 6:29 am GMT 0 Comments 1674 by : Suganthini

ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானியாவில் 5 ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றன.
ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்துச் சங்கத்தைச் சேர்ந்த 5 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளன. பிரித்தானியாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் பணிப்பகிஷ்கரிப்பு 3 நாட்களுக்குத் தொடரவுள்ளது. இதனால், ரயில் பயணிகள் பாரிய சிரமத்தை எதிர்நோக்க நேரிடுமென, எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையானது, பாதுகாப்பான விடயமல்லவெனவும், மேற்படி தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.