ஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது!
In இங்கிலாந்து December 24, 2020 4:06 pm GMT 0 Comments 2795 by : Litharsan

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீன்பிடி உரிமைகள் மற்றும் எதிர்கால வர்த்தக விதிகள் குறித்த பலமாத கருத்து வேறுபாடுகள் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து, டவுனிங் ஸ்ட்ரீற் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், சட்டங்கள் மற்றும் விதியின் கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் கடுமையானவை என்றாலும், இது முழு ஐரோப்பாவிற்கும் நல்லதொரு ஒப்பந்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஒப்பந்தம் நியாயமான மற்றும் சீரானது என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் கூறியுள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் நீண்ட மற்றும் நெருக்கடியான நிலையை அடைந்தததாகவும், எனினும் தற்போது நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளதாகவும் லேயன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.