ஐரோப்பிய ஒன்றிய சீர்திருத்த தீர்மானத்தை முன்வைப்பதில் தாமதம்!
In ஐரோப்பா March 11, 2018 6:25 am GMT 0 Comments 1499 by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீர்திருத்த முன்மொழிவை முன்வைக்கும் திட்டத்தை ஜேர்மனும் பிரான்ஸும் பிற்போட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, சஞ்சிகையொன்றுக்கு ஐரோப்பிய அதிகாரியொருவர் வழங்கிய நேர்காணலின்போது கூறியதாக, சர்வதேச ஊடகங்கள் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கான உச்சி மாநாடு இம்மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கான முன்மொழிவை, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும் முன்வைக்கவிருந்தனர். இருப்பினும், மாநாட்டில் இந்த முன்மொழிவை வைப்பதை தற்போது அவர்கள் பிற்போட்டுள்ளனர்’ என்றார்.
ஜேர்மனில் கடந்த செப்டெம்பரில் நடந்த பொதுத்தேர்தலில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாததால், அந்நாட்டில் புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் இதுவரைகாலமும் இழுபறி காணப்பட்டது. இவ்வாறான குழப்பத்துக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றிய சீர்திருத்தத்தை பிரான்ஸுடன் இணைந்து ஜேர்மன் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், ஐரோப்பிய ஒன்றிய சீர்திருத்த முன்மொழிவை வைக்க காலஅவசாம் தேவைப்படுவதாக, ஜேர்மன் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.