News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • டெல்லியை சென்றடைந்தார் சவுதி இளவரசர்
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • இம்ரான் கான் பேச்சு அர்த்தமற்றது – இந்திய வெளியுறவுத்துறை பதிலடி
  1. முகப்பு
  2. தொழில்நுட்பம்
  3. ஐ ஃபோனுக்கு அடுத்து அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் கூகுளின் பிக்ஸல்

ஐ ஃபோனுக்கு அடுத்து அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் கூகுளின் பிக்ஸல்

In தொழில்நுட்பம்     October 6, 2018 11:59 am GMT     0 Comments     1481     by : Litharsan

ஐ ஃபோனுக்கு எதிராக வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் கூகுள் பிக்ஸல் 3 மற்றும் கூகுள் பிக்ஸல் 3 XL ஸ்மார்ட் ஃபோன்களை கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளது.

2016 இல் தொடங்கப்பட்ட கூகிளின் பிக்ஸல் ஃபோன்கள், ஆப்பிள் மற்றும் பிற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் போட்டியாக வெளிவந்துள்ளது.

இந்த கையடக்கத் தொலைபேசிகள் வெளியாகுவதற்குச் சில நாட்கள் இருந்தும் பல விடயங்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டன.

எப்போதும் இருக்கும் 16:9 aspect ratio திரைகளுக்குப் பதிலாக 18:9 திரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கூடுதல் திரை கிடைக்கும். மேலும் ஓரங்களில் இருக்கும் வெற்று இடங்களும் குறைகிறது.

தற்போது டிரெண்டில் இருக்கும் நாட்ச் டிசைன் இந்தப் போன்களிலும் இருக்கும். மேலும், திரையின் அளவு பற்றிய தெளிவான தகவல்கள் இல்லையென்றாலும் பிக்ஸல் 3 XL, 6.7 இன்ச்சிலும் பிக்ஸல் 3, 5.5 இன்ச்சிலும் கிடைக்குமென எதிர்பார்க்கலாம். 6.7 மிகப் பெரிய சைஸ் போலத் தெரிந்தாலும், 18:9 மற்றும் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் மூலம் இது எதிர்பார்க்கும் அளவுக்கு பெரிதாக இருக்காது.

இதேவேளை கமெரா தொடர்பில் தகவல்கள் வெளியாகாத போதிலும் விசேட விடயங்கள் உள்ளடங்கியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

செல்ஃபி கேமராக்களைப் பொறுத்தவரை இரண்டாவதாக ஒரு கேமரா சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

புரொசஸர்களைப் பொறுத்தவரை Snapdragon 845 இதில் இருக்கும். குவால்காம் நிறுவனத்தின் தற்போது இருக்கும் சிறந்த முன்னணி புராசஸர் இது என்பது குறிப்பிடத்தக்கது. RAM அதே 4 GB தான் இருக்குமெனத் தெரிகிறது. லைவ் வால்பேப்பர்களும் பலவகைகளில் இதில் இருக்குமாம்.

இவ்வாறிருக்க எவையெல்லாம் பிக்ஸல் 3 மற்றும் 3 XLலில் இருக்கும், மக்களால் இது எப்படி வரவேற்கப்படும் என்பது அடுத்தவாரம் தெரிந்துவிடும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • புதிய பல அம்சங்களுடன் வெளிவரவுள்ள Galaxy S-10  

    Samsung ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அடுத்து Galaxy S-10 மொடல் கைப்பேசியை வெளியிட திட்டமிட்டுள்ளத

  • புதிய சாதனையை நோக்கி நகரும் அப்பிள்: இதயத் துடிப்பை கண்டறிய புதிய ஸ்மார்ட் அறிமுகம்  

    தொழில்நுட்ப உலகில் சாதனை படைத்துள்ள அப்பிள் நிறுவனம் தமது புதிய ஐ ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்த

  • ஸ்மார்ட் போனின் உயிரை பாதுகாக்க சில வழிகள்…  

    தற்போது ஸ்மார்ட் தொலைபேசி பாவனையாளர்கள் மிகக் குறைவு என்பதே உண்மை அதாவது “உடுக்கை இழந்தவன் கை போல இட


#Tags

  • #ஸ்மார்ட் ஃபோன்#
  • Google Phone
  • Google pixel 3
  • smart phone
  • ஐ போன்கள்
  • கூகுள் பிக்ஸல்
    பிந்திய செய்திகள்
  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
    பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
    இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
    ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
    ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
  • பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
    பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
  • உலக புகழ்பெற்ற ஜேர்மனிய ஆடை வடிவமைப்பாளர் உயிரிழப்பு
    உலக புகழ்பெற்ற ஜேர்மனிய ஆடை வடிவமைப்பாளர் உயிரிழப்பு
  • மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
    மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
  • 2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
    2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
  • இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
    இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
  • ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
    ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.