ஐ.எஸ் பயங்கரவாதிகள் குறித்து ஞானசார தேரரிடம் தகவல் பெற்றுக்கொள்ளும் புலனாய்வுப் பிரிவினர்?

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரிடம் புலனாய்வுப் பிரிவினர் சில முக்கிய தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலியகொடவின் மனைவியினை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஞானசார தேரரிடம் சில தகவல்களை கேட்டறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கடும்போக்குவாத செயற்பாடுகள் அதனுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களே இவ்வாறு திரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டு ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிக்க முடியும் என பௌத்த மதகுருக்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.