News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

கூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

In இலங்கை     January 18, 2019 5:24 pm GMT     0 Comments     1346     by : Ravivarman

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்பாடும் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசியலமைப்பு தொடர்பாக, நாம் நிபுணர்களின் அறிக்கையொன்றைத் தான் சமர்ப்பித்துள்ளோம். இன்னும் வரைபொன்றைக் கூட நாம் தயாரிக்கவில்லை.

இது அரசியலமைப்பல்ல. அரசியலமைப்புச் சபைத் தான் அரசியலமைப்பை தயாரிக்கும் பணியை மேற்கொள்ளும். எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல, இது பின்கதவால் கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல.

ஒற்றையாட்சி முறைமை மாறாது என்ற சரத்துக்கு இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழ்த் தரப்பினர் ஆதரவு வழங்கியுள்ளனர். இதில், ஏக்கிய எனும் பதம் மூன்று மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்படாது அவ்வாறு இடம்பெறும்.

அதேபோல், பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தக் கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், மாகாணசபைகளை சக்திமிக்கதாக மாற்றுவது தொடர்பில்தான் நாம் தற்போது, வழிநடத்தல் குழுவில் ஆராய்ந்து வருகிறோம்.

முதன்முறையாக, அரசியலமைப்பு ஸ்தாபிக்கும் பணியில் தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மேலும், அரசியல் சூழ்ச்சி இடம்பெற்றபோதும், அவர்கள் அரசியலமைப்பை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக செயற்பட்டார்கள்.

இதுவே எமக்கான வெற்றியாகத் தான் கருதுகிறோம். அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் எந்தவொரு நிபந்தனையையும் விதிக்கவில்லை.

அவர் கோரியது ஒன்றை மட்டும்தான். அதாவது, தெற்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை வடக்கிற்கும் செய்ய வேண்டும் என்று தான் கேட்டார்கள்.

மேலும், அமைச்சரவையின் முடிவுகள் அவர்களுடன் கலந்தாலோசித்துத் தான் எடுப்பதாகக் கூறப்படுவதுகூட முற்றிலும் பொய்யான ஒரு கருத்தாகும்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • போர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்!  

    சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து

  • பொருளாதார மத்திய நிலையத்தின் இடமாற்றத்திற்கு கூட்டமைப்பு காரணமல்ல: சி.வி.கே.  

    வட.மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக்குளத்தில் அமைக்கப்படாமல

  • மஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது: பிரதமர் ரணில்  

    புதிய அரசிலமைப்பு நாட்டினைத் துண்டாக்கும் எனக்கூறிய மஹிந்த ராஜபக்ஷவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க

  • புதிய அரசிலமைப்பின் ஊடாக மாகாணசபைகள் பலப்படுத்தப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல  

    புதிய அரசிலமைப்பின் ஊடாக மாகாணசபைகளைப் பலப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றதே தவிர, வடக்கையும் கிழக

  • அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது: விமல் உறுதி!  

    தற்போதைய அரசாங்கத்தினால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீ


#Tags

  • luxman kiriella
  • அரசியலமைப்பு
  • எதிர்க்கட்சிகள்
  • கூட்டமைப்பு
  • லக்ஷ்மன் கிரியெல்ல
    பிந்திய செய்திகள்
  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
    அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
    புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
    பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
    காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
    ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  • முதன்மைச் செய்திகள் (16.02.2019)
    முதன்மைச் செய்திகள் (16.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (15.02.2019)
    முதன்மைச் செய்திகள் (15.02.2019)
  • மதியச் செய்திகள் (16.02.2019)
    மதியச் செய்திகள் (16.02.2019)
  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
    சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.