ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு அணிகள் – கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்!

2022ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மேலும் இரு அணிகளைச் சேர்த்துக்கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தற்போது எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுக் கூட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதன்போது, 2022ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மேலும் இரண்டு அணிகளைச் சேர்த்து பத்து அணிகள் பங்கேற்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதேவேளை, ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணப் போட்டி மற்றும் உலகக் கிண்ண 50 ஓவர் போட்டி ஆகியவற்றை இந்தியாவில் நடத்துவதற்கு மத்திய அரசிடம் வரி விலக்கு கோரவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.