ஐ.பி.எல்: போராடி தோற்றது பெங்களூர் அணி
ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், மும்பை அணி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து வந்த மும்பை அணி, அதன் முதல் வெற்றியை நேற்று (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்தது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 13வது போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து, 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஓட்டங்கள் எதனையும் பெறாத நிலையில், முதல் இரு விக்கட்டுக்களையும் இழந்த மும்பை அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்த இமாலய இலக்கை எட்டியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லிவிஸ் மிகச்சிறந்த ஒத்துழைப்பினை வழங்கினார்.
துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ரோஹித் சர்மா 94 ஓட்டங்களையும், எவின் லிவிஸ் 65 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் யாதவ் மற்றும் அன்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 214 என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 46 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனி மனிதனாக போராடி ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த போதும், அவரால் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது.
பந்துவீச்சில், குர்ணால் பாண்டியா 3 விக்கட்டுக்களை வீழ்த்த, மெக்லெனகான் (ஆஉஊடநயெபாயn), பும்ரா ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களைக் கைப்பற்றினர்.
மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மா போட்டியின் நாயகனாக தெரிவானார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.