ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் புதிய நிலைவரம்!
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டிகளுமே இரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.
இதற்கிடையில் இத்தொடரில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள், அவ்வப்போது உபாதைக்குள்ளாகின்றனர். ஆகையால் அவர்களுக்கு பதிலாக பல வீரர்களும் உள்வாங்கப்படுகின்றனர்.
மேலும், பல சானைகள் பதிவு செய்யப்படுகின்றன. வீரர்களுக்குள் முரண்பாடுகள், வீரர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இதுபோன்ற செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவ்வாறான செய்திகளை தற்போது பார்க்கலாம்,
அந்த வகையில் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில், விளையாடாத சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், எதிர்வரும் போட்டியில் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கேன் வில்லியம்சன் சொந்த காரணங்களுக்காக உடனடியாக நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், தற்போது 27ஆம் திகதி நடைபெறவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
……………..
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, ஐ.பி.எல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணியின் தலைவராக 4,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
…………….
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற வீரர்களுக்கு, உலகக் கிண்ணத்தைக் கருத்தில் கொண்டு நான்கு நாட்கள் ஓய்வு வழங்குவதற்கு மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நான்கு நாட்களில் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்லலாம், சுற்றலாப் பயணங்கள் செல்ல முடியும். ஆனால் துடுப்பு மட்டையையோ அல்லது பந்தையோ தொடவே கூடாது என வீரர்களுக்குச் அன்பான உத்தரவொன்றையும் மும்பை அணி நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
இதன்படி, இம்முறை உலகக் கிண்ண தொடரிவ், இடம்பிடித்து மும்பை அணிக்காக விளையாடி வருகின்ற ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குயிண்டன் டி கொக், லசித் மாலிங்க உள்ளிட்ட முன்னணி வீரர்களை அணியில் இருந்து விடுவிப்பதற்கு மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
…………..
ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவுஸ்ரேலிய வீரர் ஆஷ்டன் டர்னர், இதுவரை மூன்று போட்டிகளில் களம் இறங்கி, ‘கோல்டன் டக்’ அதாவது சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.
அத்தோடு, இதற்கு முன்பு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ‘டக்அவுட்’ ஆகியுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் டக்அவுட் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
……………….
மும்பை இந்தியன்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மில்னே இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே வெளியேறினார். இதனால் விண்டிஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அல்சாரி ஜோசப்பை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அறிமுக போட்டியிலேயே 12 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார். மேலும் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அல்சாரி ஜோசப்பிற்குப் பதிலாக, மும்பை அணி, தென்னாபிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் பியரன் ஹென்ரிக்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது.
……………
சென்னை- சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டி, ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 3 பார்வையாளர்கள் அரங்கின் பிரச்சினையாலேயே இறுதிப்போட்டி, ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.