ஒக்லாந்து டென்னிஸ்: இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார் ஜெசிகா பெகுலா!

ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனையான ஜெசிகா பெகுலா, வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.
பெண்களுக்கே உரித்தான ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது நியூஸிலாந்தில் நடைபெற்றுவருகின்றது.
இதில், இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனையான ஜெசிகா பெகுலாவும், டென்மார்க்கின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கியும் மோதினர்.
இரசிகர்களுக்கு உச்ச பரபரப்பபை ஏற்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என கரோலின் வோஸ்னியாக்கி கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் விளையாடிய ஜெசிகா பெகுலா செட்டை, 6-4 என போராடி கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இருவரும் தலா 1 செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது.
இதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா, யாரும் எதிர்பாராத விதமாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி செட்டை 6-0 என எளிதாக கைப்பற்றி வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்த ஜெசிகா பெகுலா, நாளை நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சை எதிர்கொள்ளவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.