ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசிக்கு இந்திய நிபுணர் குழு ஒப்புதல்!

அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இன்று அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, இந்தப் பரிந்துரைகளை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளருக்கு குறித்த நிபணர் குழு அனுப்பவுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தடியாக 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் பிரதிநிதி மற்றும் அதன் வல்லுநர்கள் இவ்வாரம் இரண்டாவது முறையாக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
இவர்கள், ஜேர்மனியின் பயோஎன்டெக் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் மூலம் ஃபைசர் இன்க் தயாரித்த தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகார விண்ணப்பங்களை பரிசீலித்து வருகிறார்கள்.
இதேவேளை, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 50 மில்லியனுக்கும் அதிகமான அளவுகளை ஏற்கனவே, இந்தியாவின் உள்ளூர் உற்பத்தியாளரான சீரம் நிறுவனம் கையிருப்புச் செய்துள்ளமை குறப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.