ஒக்ஸ்போர்ட் கொவிட்-19 தடுப்பூசி வயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது!
In இங்கிலாந்து November 19, 2020 8:21 am GMT 0 Comments 1949 by : Anojkiyan

ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 60 முதல் 70வயதானவர்களுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது.
இது வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் வயதினரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
560 ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பின்னர் வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட சோதனைகளில் கொரோனா வைரஸை தடுப்பூசி நிறுத்துமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கின்றனர். இந்த முக்கியமான கட்டத்தின் ஆரம்ப முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனைகளில் நல்ல முடிவுகளை பிரதிபலித்துள்ளன.
கொவிட் தடுப்பூசியை வளர்ப்பதில் உள்ள சவால், ஒருவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் வைரஸுக்கு எதிராக போராட உடலைத் தூண்டுவதாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் சட்டம், பல
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில