ஒடிசாவை நோக்கி நகர்கிறது ஃபானி புயல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது அரசு!
In இந்தியா May 1, 2019 4:34 am GMT 0 Comments 2129 by : Krushnamoorthy Dushanthini

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயலானது தற்போது தீவிர புயலாக உருவெடுத்துள்ளதுடன், நாளை மறுநாள் ஒடிசா மாநிலத்தின் கரையை கடக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைவரப்படி ஒடிசாவின் புரி நகரிலிருந்து தென்மேற்கு திசையில் 730 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதுடன், குறித்த புயலானது 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த புயல் எதிர்வரும் 3ஆம் திகதி ஒடிசாவின் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதுடன், ஒடிசாவின் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புயலினால் ஏற்படும் அனர்த்த நிலைமைகளின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹெலிகொப்டர்களை அனுப்பிவைக்குமாறு மாநில செயலாளர் ஆதித்யா, மத்திய அமைச்சரவை செயலரை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.