ஒன்பது வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம்
In சினிமா May 3, 2019 7:13 am GMT 0 Comments 2287 by : adminsrilanka

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியள்ளது.
அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகின்றார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கின்றார்.
இத்திரைப்படம் ஜெயம் ரவி நடிக்கும் 24ஆவது திரைப்படமாகும். இதில் ஜெயம் ரவியின் வேடங்களாக ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990களில் வாழ்ந்த இளைஞர் உட்பட 9 வேடங்களில் நடிக்கின்றார். இந்த 4 வேடங்கள் தவிர ஏனைய வேடங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கின்றார். இவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றார்கள்.
தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் திரைப்படமாகும். அதேநேரம் நகைச்சுவையாக கலந்த கதையாகும். எனினும் இத்திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.