ஒன்ராறியோ மாநில அரசின் மூத்த அதிகாரியொருவர் பதவி விலகல்!

முற்போக்கு பழமைவாதக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவைகள் பிரிவின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய ஜோன் சிங்கிளையர், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவர் பதவியிலிருந்து விலகியதன் மூலம், அண்மையில் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாநில அரசிலிருந்து விலகும் மூன்றாவது மூத்த முக்கிய அதிகாரியாக இவர் இடம்பெற்றுள்ளார்.
ஜோன் சிங்கிளையர் தமது பதவி விலகலுக்கான காரணம் எதனையும் தெரிவிக்காத நிலையில், அவர் தானாகவே பதவி விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற விபரங்கள் எதனையும் கட்சியும் இதுவரை வெளியிடவிலலை.
எனினும், குறித்த இந்த விடயத்தில் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து எதனையும் கூறமுடியாது எனவும், எனினும் ஜோன் சிங்கிளையர் பதவியில் இல்லை என்பதனை மட்டும் உறுதிப்படுத்த முடியும் என்றும் கட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
கடந்த வாரம் முற்போக்கு பழமைவாதக் கடசியின் சட்டமன்ற உறுப்பினரும், பொருளாதார அமைச்சருமான ஜிம் வில்சனும் அமைச்சரவையில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
இதேபோல முதல்வர் டக் ஃபோட்டின் நிர்வாகத்தில், பிரச்சினைகள் தொடர்பிலான முகாமைத்துவ பிரிவின் நிறைவேற்று இயக்குனராக கடமையாற்றிய ஆனட்ரூ கிம்பரும் கடந்த வாரத்தில் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.