ஒன்றாரியோவில் வசிப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை குறித்து நினைவூட்டல்!

ஒன்றாரியோ மாகாணத்தில் வசிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் தங்குமிட உத்தரவைக் குறித்து நினைவூட்டப்பட்டுள்ளார்கள்.
அலைபேசிச் சாதனங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் மூலம் அவசர எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
வீட்டில் தங்குவதற்கான உத்தரவு நடைமுறையில் உள்ளது. உணவு, சுகாதாரம், உடற்பயிற்சி அல்லது வேலை போன்ற அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள். இது சட்டமாகும். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று எச்சரிக்கை குறிப்பிடுகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில், கொவிட்-19 பரவுவதை தடுக்கும் முயற்சியாக அரசாங்கம் புதிய உத்தரவை அறிவித்தது.
அத்தியவசியக் கடைகள், மருந்தகங்கள், எரிவாயு நிலையங்கள் மற்றும் விநியோகிக்கும் உணவகங்கள் இந்த புதிய விதிகளால் பாதிக்கப்படாது. இருப்பினும், மது சில்லறை விற்பனையாளர்கள் போன்ற அத்தியாவசியமற்ற கடைகளை இரவு 8 மணிக்குள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
முற்றிலும் தேவைப்படும்போது மட்டுமே வீட்டை விட்டு வெளியேறவும், முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யவும் குடியிருப்பாளர்கள் நினைவூட்டப்படுகிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.