ஒன்றாரியோ பாடசாலை மாணவர்கள் 11ஆம் திகதி நேரில் கற்றலுக்கு திரும்புவார்கள்!

ஒன்றாரியோ பாடசாலை மாணவர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி நேரில் கற்றலுக்கு திரும்புவார்கள் என கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடக்கப் பாடசாலை மாணவர்கள் ஜனவரி 11 ஆம் திகதி நேரில் கற்றலுக்கு திரும்புவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
வடக்கு ஒன்றாரியோவின் பொதுச் சுகாதார பிரிவுகளில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் ஜனவரி 11ஆம் திகதி மீண்டும் பாடசாலைக்குச் செல்வார்கள்.
மேலும் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் ஜனவரி 25ஆம் திகதி நேரில் கற்றலுக்குத் திரும்புவார்கள்.
முன்னணி மருத்துவ வல்லுநர்கள் பாடசாலைகள் சமுதாயப் பரவலுக்கான மூலங்கள் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது என கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அறிக்கையில், தொலைதூரக் கற்றலின் கூடுதல் செலவினங்களைக் கணக்கிடுவதற்காக ஒன்றாரியோ அதன் கற்றலுக்கான ஆதரவின் திட்டத்தின் தகுதியை விரிவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.