News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை
  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஒன்றிணைந்த எதிரணிக்கு எதிராக ஐ.தே.க. முறைப்பாடு

ஒன்றிணைந்த எதிரணிக்கு எதிராக ஐ.தே.க. முறைப்பாடு

In இலங்கை     September 11, 2018 10:42 am GMT     0 Comments     1661     by : Risha

ஒன்றிணைந்த எதிரணியினரால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது வழங்கப்பட்ட பாலில் விஷம் கலந்ததாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நாமல் ராஜபக்ஷவின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாட்டையே வெளிக்காட்டுவதாக, ஐ.தே.க.வின் ஊடகப் பேச்சாளரான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையத்தல் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐக்கிய தேசியக் கட்சி, மட்டமான அரசியல் செயற்பாடுகளில், ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அவர்களின் போரட்டம் தோல்வியடைந்தவுடன் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள்.

ஐ.தே.க.வினர், சுதந்திரக் கட்சியினருக்கு விஷம் கொடுத்துள்ளதாக நாமல் கிராமங்களில் பொய் பிரசாரங்களை மேற்கொள்கிறார்.

இந்த போராட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பினை காட்டியதை சமூக ஊடகங்களிலேயே நாம் பார்த்தோம். நாட்டில் இனவாதத்தைப் பலப்படுத்தும் நோக்கில் செயற்படுகின்ற ஒன்றிணைந்த எதிரணியினர், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்குவைத்தே போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளைப் பார்க்கும் போது, கடந்த காலங்களில் அம்பாறையில் இடம்பெற்றக் கலவரங்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதையும் அறிய முடிகிறது. மஹிந்த அணி, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இருந்த சிறிதளவு வாய்ப்புகளும், நாமல் ராஜபக்ஷவின் செயற்பாட்டினால் இன்று இல்லாமல் போயுள்ளது.

எவ்வாறாயினும், எமது கட்சி உறுப்பினர்கள் மீது முன்னெடுக்கப்படும் போலிப்பிரசாரங்களை சட்ட ரீதியாக அணுக நாம் தீர்மாத்துள்ளளோம். நாம் இதற்கெதிராக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். இது மக்களை மோத விடும் மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும்.

இந்த விடயம் குறித்து நாம் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளோம். இதுதொடர்பில் நாம் எவ்வாறான விசாரணைக்கு முகம் கொடுக்கவும் தயாராகவே இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!  

    யாழ். பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் இன்று (ஞாயிற்று

  • கூடுதல் அதிகாரம் கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை – மஹிந்த  

    மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம

  • இன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை!  

    வேகமாக வளர்ந்து வரும் வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது. ஒளிப்படங்களை பகிரும் இத்தளத்தில் குறை

  • எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது: அமைச்சர் சஜித் உறுதி!  

    ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட

  • ஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி  

    அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால


#Tags

  • complaint
  • joint opposition
  • United National Party
  • ஐக்கிய தேசியக் கட்சி
  • ஒன்றிணைந்த எதிரணி
  • முறைப்பாடு
    பிந்திய செய்திகள்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
    வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
    துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
    தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.