ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்ப வடக்கு மக்கள் தம்மை அர்ப்பணித்துள்ளனர் – ஆளுநர்
In இலங்கை November 18, 2019 4:41 am GMT 0 Comments 1550 by : Dhackshala

இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தனக்கான ஒரு இடத்தினை மீள்நிலைநாட்டிக்கொள்வதற்கு புதியதொரு வழிகாட்டலும் தூர நோக்கும் அர்ப்பணிப்பு நிறைந்த கடின உழைப்பும் நமது தாய்நாட்டிற்கு தற்போது தேவையாகவுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன மத அரசியல் பேதமின்றி இலங்கையின் அனைத்து மக்களையும் தனது வெற்றிப் பயணத்தில் இணைத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கு புதிய ஜனாதிபதிக்கு தைரியமும் நம்பிக்கையும் கிடைப்பதற்கு வடக்கு மாகாண மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகம், சமத்துவம் நிறைந்த வளமான ஒன்றுபட்ட இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு வடக்கு மாகாண மக்கள் தம்மை அர்ப்பணித்துள்ளார்களென்றும் நமது தாய்நாடு எப்பொழுதுமே ஆசீர்வதிக்கப்படட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.