ஒரு மாத காலப்பகுதியில் காலி முகத்திடல் கரையோரம் மற்றும் நடை பாதை ஒளியூட்டப்படும் – ஜோன்ஸ்டன்

ஒரு மாத காலப்பகுதியில் காலி முகத்திடல் கரையோரம் மற்றும் நடை பாதை ஒளியூட்டப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடை பாதை மற்றும் கடற்கரையினை சூழவுள்ள இருளான பகுதியை ஒளியூட்டி மனதிற்கு ரம்மியமான இடமாக மாற்றியமைக்கும் பொருட்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அழகான நாடொன்றை உருவாக்கும் முகமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு முன்னுரிமை அளித்து இச்செயற்பாட்டினை மிக விரைவாக முன்னெடுக்குமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.