ஒரே பாலினத் திருமணத்துக்கு வடக்கு அயர்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்
In இங்கிலாந்து January 13, 2020 1:04 pm GMT 0 Comments 2342 by : S.K.Guna

ஒரே பாலினத் திருமணம் இப்போது வடக்கு அயர்லாந்தில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை முதல், ஒரே பாலினத் தம்பதிகள் திருமணம் செய்ய பதிவுசெய்ய முடியும். முதலாவது திருமண விழா பெப்ரவரியில் நடைபெறும்.
ஏற்கனவே திருமணமான ஒரே பாலினத் தம்பதிகளின் திருமணம் இப்போது வடக்கு அயர்லாந்தில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே சேர்ந்து வாழ்பவர்கள் இந்தக் கட்டத்தில் அதைத் திருமணமாக மாற்றமுடியாது.
சேர்ந்து வாழ்பவர்களை சட்ட ரீதியாக மாற்றுவது மற்றும் ஒரே பாலினத் திருமணங்களில் தேவாலயங்களின் பங்கு குறித்து வடக்கு அயர்லாந்து அலுவலகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ஆலோசனையைத் தொடங்கவுள்ளது.
நன்றி bbc.co.uk
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.