ஒற்றுமையின்மையை தோற்றுவிக்கும் குழுக்களை ஒழிக்கவேண்டும் – கனடாவிற்கான இலங்கை தூதுவர்

மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் இனவெறிக் குழுக்களை களைந்து ஒழித்திட வேண்டும் என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அசோக கிரிஹாகம தெரிவித்தார்.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனையும், நினைவுகூரல் நிகழ்வும் கனடாவில் இடம்பெற்றது.
ஒட்டாவா தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட நினைவுகூரலைத் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையிலேயே உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல தசாப்தங்களாக பல்லின மற்றும் பல் கலாசார நாடாக விளங்கிவரும் இலங்கையில் அனைவரும் ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் சில குழுக்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.