ஒலிம்பிக் 2024 – நீச்சல் தடாகம் அமைக்கும் பணி விரைவில் ஆரம்பம்!

2024ஆம் ஆண்டு பரிசில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நீச்சல் தடாகம் அமைக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தினை Métropole du Grand கைச்சாத்திட்டுள்ளது.
செந்தனியின் Plaine Saulnier பகுதியில் இந்த நீச்சல் தடாகம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான நீச்சல், தண்ணீர் பந்தாட்டம் (water polo), டைவிங் போன்ற விளையாட்டுக்களுக்காக இந்த தடாகம் அமைக்கப்படவுள்ளது.
முன்னதாக சென் நதியில் ஒலிம்பிக் நீச்சல் தடாகத்தினை அமைக்க திட்டமிடப்பட்டிருந்ததும், ஆனால் நீரின் சுகாதாரம் கருதியும், அதற்கான கால அவகாசம் போதாமையினாலும் திட்டம் கைவிடப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.